177 total views, 1 views today
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் பரியேறும் பெருமாள் பிஏபிஎல். கதிர் , கயல் ஆனந்தி, யோகிபாபு , லிங்கேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
சமீபத்தில் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் திரைப்படத்தினை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் அதிகாரிகள் எந்த இடத்திலும் கட் சொல்லாமல் படத்திற்கு U சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.
படத்தின் கதை மற்றும் கதைக்களத்தை வெகுவாக பாராட்டிய அதிகாரிகள் இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் திடமும் , இரண்டு இடங்களில் மட்டும் மியூட் செய்ய சொல்லிய அதிகாரிகள், இந்த படத்தில் எந்த இடத்திலும் கட் சொல்ல இடமில்லை. மட்டுமினறி இப்படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம் என்று சொன்னதோடு, இது போன்ற கதையுடன் கூடிய கமர்சியல் திரைப்படங்களில் சின்ன சின்ன இடங்களில் கட் சொன்னால் அதன் உண்மைத்தன்மை குலைந்துவிடும், நல்ல சினிமா எடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் என்று பாராட்டியிருக்கிறார்கள்.