சசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2

0

 186 total views,  1 views today

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

 இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஏகாம்பரம்

கலை – ஜாக்கி

எடிட்டிங் –  ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி –  திலீப் சுப்புராயன்

நடனம் – திணேஷ், ஜான்  

மக்கள் தொடர்பு – மெளனம் ரவி  

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

தயாரிப்பு  –  எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார்  – சமுத்திரகனி

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9 ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.

11ம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது.

Share.

Comments are closed.