பிக் பிரிண்ட் pictures என்னும் பட நிறுவனத்தின் சார்பில் பி. கார்த்திகேயன் தயாரிக்கும் “ரெண்டாவது படம்” மூலம் அறிமுகமாகிறார் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா.
இதுவரை ஏற்றிராத கதா பாத்திரத்தில் சரத் குமார் நடிக்க அவருடன் ல்க்ஷ்மி ப்ரியா, mime கோபி,நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்க கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைக்க, பிரவீன் ஆன்டினி படத்தொகுப்பு செய்ய , வைர பாலன் அரங்கமைக்கிறார்.
“எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிட்டிய பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக்கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை துவக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ளது” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குனர் பிருதிவி ஆதித்யா