‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ‘ப்ரோ’ பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறுகிறது

0

Loading

சந்தானம் – வைபவி ஷண்டிலியா நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்த படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் ‘ப்ரோ’ பாடல் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் பலத்த பாராட்டுகளை இந்த பாடல் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  ‘கெனன்யா பிலிம்ஸ்’ சார்பில் ஜெ செல்வகுமார் தயாரித்து  இருக்கும் இந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தில்,  நாகேஷ் பிஜேஷ்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
“சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறப்பான பாடலை வைக்க வேண்டும் என்று நான்  எண்ணிய போது , என் மனதில் உதித்த முதல் கேள்வி, தாய், தந்தை  வரிசையில் ஏன் நண்பனை வைக்க கூடாது? என்பது தான். மாமா, மச்சி என்ற காலம் சென்று, தற்போது ‘ப்ரோ’ கலாச்சாரத்திற்கு நாம் மாறி இருக்கின்றோம் என்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம்  சந்தானம் ப்ரோ.  அதுமட்டுமின்றி, படப்பிடிப்பில் ஆரம்பித்து ரசிகர்கள் வரை பெருமபாலானோர் அவரை ப்ரோ என்று தான் அழைக்கின்றனர். அதனால் தான் நாங்கள் இந்த ப்ரோ பாடலை உருவாக்கினோம். வெளியான சில நாட்களிலேயே யுடியூபில் ஏறக்குறைய இரண்டு லட்சம் பார்வையாளர்களை எங்கள் ப்ரோ பாடல்  எட்டி வருவது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது ” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஆனந்த் பால்கி

Share.

Comments are closed.