1,208 total views, 1 views today
ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B பேசுகையில் , ” ‘சர்வைவ ‘ எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும் ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் . எனது இசை வாழ்க்கையில் ‘சர்வைவ ‘ ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம் . அஜித் அவர்களுடனும் இயக்குனர் சிவா அவர்களுடனும் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடனும் ஒன்று சேர எனக்கு வாய்ப்பு அளித்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . அனிருத்தின் துள்ளலான இசையும், எனது பாணி வரிகள் மற்றும் ராப்பிங்கும் அஜித் சாரின் மிரட்டும் கம்பீர தோற்றமும் ஒன்று சேர்ந்துள்ள இப்பாடல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதில் எனக்கு அளவு கடந்த சந்தோஷம். இப்படம் வெளியாகும் போது திரை அரங்கில் மக்களோடு காண காத்துக்கொண்டிருக்கிறேன் ” என்கிறார் யோகி பி.