Tuesday, December 10

சிங்கம் 3 கர்ஜிக்குமா… சிறு நரிக்கூட்டத்திடம் தோற்றோடுமா…

Loading

 

பெரும் பொருள் செலவில் தயாரான சிங்கம் 3 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாளை வெளியாகவிருக்கிறது.
சிங்கம் 3 படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் தான் என்ன செய்யப்போகிறன் என்பதை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஆக்ரோஷமாக மூன்று நாள்களுக்கு முன்பு  பேசியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இதற்கெல்லாம் பயப்படமாட்டோம், படத்தை இணைய தளத்தில் வெளியிட்டே தீருவோம் என்று சவால் விடுத்தனர் அந்த இணையதளத்தை நடத்துபவர்கள்.
இந்த நிலையில் சிங்கம் 3 தயாரிப்பாளர்கள் கவனத்துக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறோம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தை வெளியான தினத்தன்றே சில விஷமிகள் தமிழ் ராக்கர்ஸ்.காம் இணையதளத்தில் பதிவேற்றினார்கள்.
வெகுண்டெழுந்தனர் மலையாளத் திரையலகினர்.
தமிழ் ராக்ர்ஸ்.காம் இணையதளத்தை இயக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் கோயமுத்தூரைச் சேர்ந்த சிலர்தான் என்பதை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தனர்.
விசாரணைக்குப் பின் கோவை பீளமேட்டைச் சேர்ந்த சதீஷ் என்பவனையும், புவனேஷ் என்பவனையும் கைது செய்தனர். புவனேஷின் வயது 34. சதீஷ் என்பவன் வயது 24. இந்த இளைர்களின் பின்னணியில் உள்ள மேலும் ஆறு நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேட ஆரம்பித்தனர்.
கேரளா திருட்டு விசிடி தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் எம்.இக்பால் என்பவர் தலைமையிலான போலீசார் விசாரணையை மேபற்கொண்டனர்.
அதுமட்டுமல்ல, கைதான இரண்டு நபர்களிடமிருந்தும் நாற்பது கணினிகளையும் கேரள காவல்துறையினர் அள்ளித் சென்றிருக்கின்றனர்.
அப்போது காவல்துறை அதிகாரி எம்.இக்பால் தெரிவித்த கருத்தையும் நாம் கவனத்துடன் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்த இந்தியத் திரைத்துறைக்குமே தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட சில இணைய தளங்கள் சவாலாக இருந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இழப்பை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில்இந்தப் பிரச்னை குறித்து அதிகமாகப் புகார் இருந்தாலும் நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றன என்று சில உண்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியாக சொல்லியிருக்கிறார் அந்த அதிகாரி.
கடந்த ஆண்டு மார்த் 7ஆம் தேதியிலிருந்து நவம்பர் 25ஆம் தேதிவரையிலான சுமார் ஒன்பது மாத காலத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் மட்டும் தன் பெயருடன் ஏபி, பிசி,சிசி,பிஎம்,ஏசி என்றெல்லாம் ஓரிரு எழுத்துக்களை சேர்த்தும் நீக்கியும்  எட்டு முறை தன் பெயரை மாற்றிக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
ஒரு தளத்தை தடை செய்தால் வேறு ஒரு பெயரில் தளத்தை நடத்துகின்றனர். ஐபி ஸ்பூசிங் என்ற தொழில் நுட்பத்தின் மூலம் இந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதையும் மறைத்து விடுகின்றன்ர் என்றெல்லாம் நீங்களோ அல்லது உங்கள் தயாரிப்பாளகர்கள் சங்கமோ விளக்கம் சொல்லிக்கொண்டிகருக்காமல் கேரளத்திரையலகினரைப்போல் செயலில் இறங்குவீர்களா
அவ்வாறு அவர்கள் ஆரம்பத்திலேயே செயலில் இறங்கியதால்தான் புலிமுருகன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட பின்பும் நூறுகோடி ரூபாய்க்குமேல் வசூல் செய்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையைப் பெற்றிறுக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செவிடாக இருந்தாலும் சங்கை ஊத வேண்டியது எங்கள் கடமை அல்லவா
பின்குறிப்பு _ திருட்டு டிவிடி தயாரிப்பதை கண்டுபிிடிக்கும் தொழில் நுட்பத்தையும் அதை இணையத்தில் பதிவேற்றும்போது தடுத்து ஒன்றும் தெரியாமல் போகும் தொழில் நுட்பத்தையும்கூட தமிழ் இளைஞர்கள் கண்டுபுிடித்திருக்கிறரா்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை உதவியைப் பெறலாமே