269 total views, 1 views today
பிரபல பாடகர்
சிதம்பரம் எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு விழா
பிப்ரவரி 7 ம் தேதி சென்னையில் நடக்கிறது
“ விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே “
“ நெஞ்சு பொருக்கிதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை “
“ குற்றம் புரிந்தவர் வாழ்கையில் நிம்மதி கொள்வது ஏது “
“ வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என் அருகில் வந்தால் “
“ இன்று போய் நாளை வாராய் “
“ காவியமா இல்லை ஓவியமோ ?
“ அன்பால தேடிய என் அறிவுச் செல்வம் – தங்கம் “
இது காலம் போன்ற காலம் கடந்தும் இன்றும் காற்றில் கலந்து நிலைத்து நிற்கும் பாடல்களை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். சுமார் 500 பாடல்களுக்கு மேல் பாடிய இவரது நூற்றாண்டு விழா பிப்ரவரி 7 ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
சிறுவனாக இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த சிதம்பரம் எஸ்.ஜெயராமன் காலத்தால் அழியாத பாடல்களை பாடியதுடன், இசையமைப்பாளர், விளையாட்டு வீரர் என்று பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்தார்.
சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் சகோதரி பத்மாவதியைத் தான் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருமணம் செய்தார், இவர்களின் மகன்தான் மு.கா.முத்து என்பது குறிபிடத்தக்கது.
1993 ம் ஆண்டு மறைந்த இவரது நூற்றாண்டு விழாவை இம்மாதம் 7 ம் தேதி கொண்டாடுகிறார்கள். விழாவை மு.கா.முத்துவின் மனைவியும், சிதம்பரம் எஸ்.ஜெயராமனின் மகளுமான எம்.சிவகாமசுந்தரி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விழாவிற்கு இசை துறையை சேர்ந்தவர்கள், திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.