சினிமா மீது வெறி எனக்கு – புது முகம் ராஜன் தேஜேஸ்வர்

0

 234 total views,  1 views today

                                       

 ஒரு புதுமுக நடிகருக்குள் சினிமா ஆசை இருக்கலாம்.

ஆனால் வெறி இருக்குமா என்று யோசித்தால் கேள்விக்குறியே…

 ஆனால் செயல் படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் உள்ளத்துக்குள் அவ்வளவு வெறி இருக்கிறது..

அவரிடம் பேசிய போது…..

எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது..

அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக  

வெறியாக மாறுச்சி அந்த நேரத்தில் டைரக்டர் ரவி அப்புலுவை சந்தித்த போது அவர் ஒரு கதையை சொன்னார்.

எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக இருந்ததால் நடிக்க ஓ கே சொன்னேன்.

சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே தயாரிக்க முன் வந்தார்.

அப்படி ஆரம்பித்த செயல் படம் இந்த மாதம் 18 ம் தேதி வெளியாக உள்ளது

விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு 14 வருடத்துக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியே…

இந்த படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு லவ் இருக்கு முதல் படத்திலேயே பக்கா கமர்ஷியல் கதை கிடைச்சிருக்கு..

யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பது தான் கதை.

இந்த படம் தரமா வந்திருக்கு என்ற நம்பிக்கை அப்பா C.R.ராஜன் அவர்களுக்கு வந்ததால் உடனே அடுத்த படத்தையும் தொடங்கி விட்டார்.

சமுத்திரகனி உதவியாளர் சாய் சங்கர் இயக்கத்தில் குமாரு வேலைக்கு போறான்என்று டைட்டில் வைத்திருக்கோம்.

அதுவும் ஜனரஞ்சகமான படமா இருக்கும் என்றார் ராஜன் தேஜேஸ்வர்.

 

 

Share.

Comments are closed.