சினி மியூசிசியன்ஸ் யூனியன் தேர்தலில் தலைவராக தினா தேர்வு

0

Loading

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை  சினி மியூசிசியன்ஸ் தேர்தல் நடை பெறுவது வழக்கம்அதன்படி நேற்று சென்னை வடபழனியில் அவர்களது யூனியனில் தேர்தல் நடை பெற்றது

தலைவர் பதவிக்கு கல்யாண சுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர்.

அதில் அதிக வாக்குகள் பெற்று இசையமைப்பாளர் தினா தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்..

செயலாளர் பதவிக்கு சாரங்கபாணி – P G வெங்கடேஷ் இருவரும் போட்டிதிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்..

குருநாதன்-  ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்..

உப தலைவர்களாக  மகேஷ், பாலேஷ், கோபிநாத்சேட்வீரராகவன் 

இனை செயலாளர்களாக p.செல்வராஜ் p.v.ரமணன், R.செல்வராஜ் P.பாஸ்கர், ஜோனாபக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்..

அதே நேரத்தில் சினி மியூசிசியன்ஸ் யூனியனின் அறக்கட்டளைக்கு நடந்த தேர்தலில் டிரஸ்டிக்கு போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

இவர்களின் பதவியேற்பு விழா வரும் 27ம் தேதி அன்று சென்னையில் நடக்கிறது

Share.

Comments are closed.