‘சிரிக்க விடலாமா’ ; உத்தரவு கேட்கும் பவர்ஸ்டார்..!

0

 767 total views,  1 views today

Power Star - Deepa (3)
‘வேதாளம்’ படத்தில் அஜித் பேசும் பவர்புல் வசனம் தான் ‘தெறிக்க விடலாமா’.. சூப்பர்ஹிட்டான இந்த வசனத்தை காமெடிக்காக  அப்படியே உல்டா பண்ணி ‘சிரிக்க விடலாமா’ என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது..
முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் நிதின் சத்யா,பவர்ஸ்டார் சீனிவாசன் & V.R.விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் மற்றும் மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில்  இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி பாடியிருப்பவரும் இவரே.
இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் V.B.காவியன். இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ‘ஆயுதபூஜை’ சி.சிவகுமார் மற்றும் ‘உன்னை கொடு என்னை தருவேன்’ கவி காளிதாஸ்  ஆகியோர்களிடம்  உதவி இயக்குனராக  பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை K.S.முத்து மனோகரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை கவனிக்கிறார் S.R.முத்துக்கொடப்பா.
பாடகர்கள்: வேல்முருகன், ஜெயக்குமார்
நடனம்: ரமேஷ் கமல், அக்சயா ஆனந்த்
கலை: ஏ.சி.சேகர்
தயாரிப்பு நிர்வாகி: மனோகரன்
Share.

Comments are closed.