சீயான் விக்ரம் பிறந்த நாள் விழா

0

Loading

ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய தலைமை ரசிகர் மன்றம்.

சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைப்படுபவர் நடிகர் விக்ரம். அவரின் 53 ஆவ து பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் ஏழை எளியவர்களுக்கு அயர்ன் பாக்ஸ், தையல் இயந்திரம், முச்சக்கர வாகனங்கள் என நலத்திட்ட உதவிகளும், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினர். இதனை தயாரிப்பாளர் மதன் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை விக்ரம் தலைமை ரசிகர் மன்றம் செய்திருந்தது. மன்றத்தின் மாநில நிர்வாகிகளும், மன்றத்தின் பொறுப்பாளர்களும், சீயானின் ரசிகர்களும் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.

இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் விக்ரமின் பிறந்த நாள் விழாவில் அவரது ரசிகர்கள் இரத்த தானம், அன்னதானம், ஏழைகளுக்கு நலதிட்ட உதவி ஆகியவற்றை செய்திருக்கின்றனர்.

சென்னையில் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் நீளமான போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருப்பதை அவரது ரசிகர்கள் போட்டோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Share.

Comments are closed.