சென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசைநிகழ்ச்சி CLASS OF CLASS!

0

 162 total views,  1 views today

முன்னணி திரைப்பட இசையமைப்பாளரும்,  11 கர்நாடகஇசை கலைஞர்களும் ஒன்று சேரும், சென்னை இதுவரை கண்டிராத கர்நாடக இசைநிகழ்ச்சி CLASS OF CLASS!

இடம்:சர் முத்தாவெங்கடசுப்பாராவ் ஹால், சேத்துப்பட்டு, சென்னை.

நாள்: 28 ஜூலை 2018.

அன்றையதினம்,  திரைஇசையமைப்பாளர் ரமேஷ்வினாயகம் அவர்களின் கீர்த்தனைகளைபாட, இவ்வருடசங்கீதகலாநிதி திருமதிஅருணாசாய்ராம்,  திருமதி நித்யஸ்ரீமகாதேவன், திரு.சிக்கில்குருசரண், திரு. அபிஷேக்ரகுராம், திரு. உன்னிகிருஷ்ணன், செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், திருமதி அனுராதா ஸ்ரீராம், திரு ஸ்ரீராம்பரசுராம் மற்றும் திருச்சூர்சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசைநட்சத்திரங்கள் அந்த நிகழ்ச்சி மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியின்நோக்கம்:பாரம்பரிய இசைமெட்டுக்கள் மூலம்கதை சொல்லும் பாணியை இந்தியதிரையுலகம் மட்டுமே முதலில்  கையாள ஆரம்பித்தது. காலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பலவளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி முதல் பாம்பே ஜெயஸ்ரீவரை,   ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன்வரை, என்றும் தனக்கு இணையில்லாத பாபனாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர். மேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்ஆகியோர், ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்களை அழகுப்படுத்தியிருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரியஇசைக்குமான  உறவினை கொண்டாடுவதே இந்த மூன்று மணி நேரநிகழ்ச்சியின் நோக்கம். 

நிகழ்ச்சியின்சிறப்பு:

எனினும், ஒருபாரம்பரிய இசைக்கச்சேரி முழுவதும், முப்பதுபாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து  ஒரு திரை இசையமைப்பாளரின் கீர்த்தனைகளை இசைக்கப் போகிறார்கள் என்பது இதுவே முதல் முறை.

இதுமாதிரி ஒரு நிகழ்வை ரமேஷ்வினாயகம்அன்றி வேறுயாரால் உருவாக்கமுடியும்? 

ரமேஷ் வினாயகம்பற்றி:

அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல! ஒருபாடகர், ஒருஆசிரியர், ஒருஆராய்ச்சியாளர் மற்றும் படைப்பாளர் ஆவார். 

ஒரு ஹாலிவுட்திரைப்படத்திற்கு (பென்கிங்க்ஸ்லீநடித்த ‘A Common Man’) இசையமைத்ததிலிருந்து இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை வடிவங்களை உருவாக்கியவரை, பக்தி பாடல்கள் முதல் fusion வரை, ஒரு தேர்ந்த பாடகர் முதல் ஒரு பாடலாசிரியர்வரை, ஒரு ஆசிரியர் முதல் இசை ஆராய்ச்சியாளர்வரை  ரமேஷ் வினாயகத்தின் சாதனைகள் இசைத்துறையின் பல்வேறு நடைகளில் விரிந்து கிடக்கிறது. ’ராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை பெருமைமிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான The Cambridge Companion to Film Music விவாதித்திருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு: 

இடம்: ஜி.ஆர்.டி. கன்வென்ஷன்சென்டர், தி.நகர், சென்னை.

நாள்: 18 ஜூலை 2018

 

Share.

Comments are closed.