“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” என்று ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் தயாரிப்பாளர் டி சிவா

0

Loading

img-63
‘666’ மற்றும் ’13’ ஆகிய எண்களை சொல்லும் போதே எல்லோருடைய மனதிலும் ஒரு வித அமானுஷிய நினைவு வந்து செல்கின்றது….. தற்போது அந்த எண்களின் வரிசையில் இணைந்துள்ளது ’17’. விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதே அதற்கு காரணம். சிறந்ததொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘சைத்தான்’ ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ‘சைத்தான்’ படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திரையிடப்பட்டது…. அந்த ஐந்து நிமிட காட்சிகளை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது…..”யார் ஜெயலக்ஷ்மி…?”… இந்த கேள்விக்கான விடை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று ‘சைத்தான்’ ஆக உருமாறி இருக்கும் விஜய் ஆண்டனி மூலம் தெரிய வரும். ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கும் ‘சைத்தான்’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. தரம் வாய்ந்த திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வரும் விநியோகஸ்தர் மகேஷ் கோவிந்தராஜ் இந்த சைத்தான் படத்தை ‘ஆரா சினிமாஸ்’ சார்பில் தமிழகத்தில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, விஜய் ஆண்டனி ஒரு உன்னதமான மனிதராக தான் திகழ்ந்து கொண்டிருக்கிறார்…. தமிழ் ரசிகர்களாலும், தெலுங்கு ரசிகர்களாலும் அதிகளவில் நேசிக்கப்படும் விஜய் ஆண்டனியோடு கைக் கோர்த்து இருப்பது, எங்கள் ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது…. ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக உலகிலும் நிலையான வெற்றி பெறுவதே எங்களின் நோக்கம்…. எனவே தான் ‘சைத்தான்’ னோடு இணைந்திருக்கிறோம்….” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ்.

Share.

Comments are closed.