ஜூலை 20-ல் வெளியாகும் ‘ஒண்டிக்கட்ட’…

0

 199 total views,  1 views today

 ‘தெனாவட்டு’, ‘குரங்கு கைல பூ மாலே’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’. இந்தப் படத்தை இசையமைப்பாளர் பரணி எழுதி இயக்கியிருக்கிறார்.

 

 

‘உச்சத்துல சிவா’, ‘தண்ணில கண்டம்’ போன்ற படங்களில் நடித்த நேகா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

பிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா,ஆர்.தர்மராஜ், ஷோபா,கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் வருகிற 20 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

‘ஒண்டிக்கட்ட’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு   – ஆலிவர் டெனி

இசை   –  பரணி

பாடல்கள்   –  கபிலன், பரணி, தர்மா

எடிட்டிங்  –  விதுஜீவா

நடனம்  –  சிவசங்கர், தினா, ராதிகா

ஸ்டன்ட்   –  குபேந்திரன்

 கலை   –  ராம்

தயாரிப்பு மேற்பார்வை  – பாண்டியன்

Share.

Comments are closed.