ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் “அண்டாவ காணோம்”

0

 378 total views,  1 views today

தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக  திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும்  “அண்டாவ காணோம்” திரைப்படம் நீக்கும் என தெரிவித்தார் தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார்.
ஜே எஸ் பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க பெறும் படங்களை தயாரிக்கும் அவர் மேலும் கூறியதாவது ”  “அண்டாவ காணோம் ,
நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு , குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள்  விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை.சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான்.அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில் , அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் “அண்டாவ காணோம்” என் கூற்றை நிரூபிக்கும்.
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்க படும் படங்கள் , “அண்டாவ காணோம்” போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளி வரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்” என்று தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜே எஸ் கே.

 

Share.

Comments are closed.