அறிமுக இயக்குநர் இந்த்ரா இசையமைத்து நடித்து இருக்கும் திரைப்படம் ‘டியூப்லைட்’. ‘ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்ஷன்’ சார்பில் ரவி நாராயணன் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் இந்த்ரா – அதித்தி முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘டியூப்லைட்’ படத்தின் பாடல்கள், குறிப்பாக ‘சிலோனு சில்க்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருவது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.
“இந்த காலத்திற்கேற்ற ஒரு புது ரகமான குத்து பாடல் தான், சின்மயி பாடியிருக்கும் இந்த ‘சிலோனு சில்க்’. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருவது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘டியூப்லைட்’ படத்தின் இயக்குநரும், கதாநாயகனும், இசையமைப்பாளருமான இந்த்ரா.