‘டைமண்ட் கேம்’ குறும்படம்

0

 1,482 total views,  2 views today

குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையத்தளம் மற்றும் ஊடகம் மூலமாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் குறும்படங்களை விளம்பர படுத்துவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. தரமான  குறும்படங்களை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர் ராஜசேகர் சம்பத் இயக்கத்தில் நகைச்சுவை களஞ்சியமாக உருவாகி இருக்கும் ‘டைமண்ட் கேம்’.
பல திட்டங்களோடு திருட்டு தொழிலில் முதல் முறையாக இறங்கும் ஒரு முட்டாள் கும்பலுக்கு, ஏமாற்றமே மிச்சம்! இது தான் ‘டைமண்ட் கேம்’ நகைச்சுவை குறும்படத்தின் ஒரு வரி கதை.
 
Share.

Comments are closed.