டோக்கியோ பிலிம் பெஸ்டிவலில் இயக்குனர் ராஜீவ்மேனனின் “சர்வம் தாள மயம்”

0

 256 total views,  1 views today

மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் வெற்றி படத்தை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரஹமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய “சர்வம் தாள மயம்” படத்தை இயக்கியுள்ளார்.
 
ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.
 
இன்றைய காலகட்டத்தில் சாதி மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா என்பதே படத்தின் கதை.
 
தற்போது இப்படம் 31வது டோக்கியோ இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.
 
ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.
 
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
 
Share.

Comments are closed.