தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’

0

Loading

எந்த ஒரு காதல் படம்  அது காவியமாவதற்கு  அதன் முதன்மை கதாபாத்திரங்களின் தேர்வு மிக முக்கியமானதாகும்.  சமீபத்தில் இயக்குனர் A R முருகதாஸ் வெளியிட்ட காதல் படமான  ‘அபியும் அணுவும்’ படத்தின் முதல் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து அதன் கதாநாயகி பியா பாஜ்பாய் பேசுகையில், ”இந்த படமும் இந்த கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்கள் எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபொழுது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே, அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க  வேண்டும் என்று இருந்தது. அதற்கேற்ப நானும் உடனே அதை செய்தேன். கதையின்  அழகுக்கு  தேவையும் அது. மேலும், தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகர் பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள்  நான்.
 இப்படத்தின் இயக்குனர் விஜயலக்ஷ்மி அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அருமையானது. அவரது திறனை கண்டு ரசித்துள்ளேன்.  படப்பிடிப்பு தளத்தை அவர் கையாண்ட விதமும், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களிடமிருந்து   அவர்களது முழு திறமையையும் வெளி கொண்டு வந்த விதத்தை கண்டு நான் வியந்தேன்.
கதாநாயகன் டோவினோ தோமஸுடன் இது எனக்கு முதல் படம். அபாரமான நடிப்பு திறமையை கொண்டவர் அவர். அவரது தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.
எங்கள் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு  அதனை பிரபலப்படுத்திய இயக்குனர் A R முருகதாஸு  அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களது டீசரை வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவியின் ஆதரவு எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த டீசரும் ரசிகர்களை ஆதரவை பெற்றுள்ளது. வரும் வாரங்களில் ரிலீஸாகவுள்ள’அபியும் அணுவும்’ படத்தை மிகவும் எதிர்பார்த்து உள்ளேன். இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் காதல் காவியங்களின் பட்டியலில் ‘அபியும் அணுவும்’ நிச்சயம் சேரும் என நம்பியோடு உள்ளேன்”.
 
Share.

Comments are closed.