தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்களின் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கோடாலி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கமான , இந்திய தயாரிப்பாளர் கில்ட் தலைவர் சித்தார்த் ராய் கபூர் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை தொலைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
1.) Local Body Entertainment Taxயை GST மேல் திணிக்கக் கூடாது.
2.) வெவ்வேறு மொழி படங்களுக்கு வெவ்வேறு ரேட் இருக்கக்கூடாது. என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள இந்த விஷயத்துக்கு தங்களுடைய ஆதரவை இந்திய தயாரிப்பாளர் கில்ட் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வருகிற அக்டோபர் 3 – 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த வேலை நிறுத்தத்துக்கு இந்திய தயாரிப்பாளர் கில்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த இரட்டை வரி , சினிமாவை ரசிக்க திரையரங்குக்கு வரும் இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலும் வழங்கி உள்ளது.
ஆதரவு அளித்த இந்திய தயாரிப்பாளர் கில்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எப்போதும் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே அமைப்பு இந்திய தயாரிப்பாளர் கில்ட். அவர்களோடு எப்போதும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.