தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா

0

 270 total views,  1 views today

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும்செக்க சிவந்த வானம்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.

பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.

மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

பிரபல மாடலான டயானா எரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருப்பது, சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Share.

Comments are closed.