தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

0

Loading

 

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத்தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

 

Director : Magizh Thirumeni
Produced By : Inder Kumar
Production Banner : Redhan – The Cinema People
Director Of Photography : Gopinath
Editing : Srikanth
Art Director : Amaran
Music : Arunraj
Lyrics : Madan Karky
Stunt : Stunt Silva / Anbu & Arivu
Choreography : Dinesh
Production Controller : R P Balagopi & E Elangovan
Audiography : T Udhayakumar
Sound Designer : Suren & Alagiakoothan
Costume Designer : Prathista
Stills : Ajay Ramesh
Vfx : Prasad
Publicity Designs : Sasitharan
Costumer : P R Ganesan
Makeup : Ramachandran
Pro : Nikkil

Share.

Comments are closed.