தமிழ் மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்

0

Loading

செவிக்கு இனிமையான melody  பாடல்கள் காலத்தையும் தாண்டி  ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து  மெலோடியான பாடல்கள்  மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர்  ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகை ஆகாது. பிண்ணனி  இசை கோர்பிலும்  சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி  வருகிறது.தற்போது அவர் தெலுங்கில் கூட  அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.
” நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் “அர்ஜுன் ரெட்டி” புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ” மரோ பிரபஞ்சம்” ,என்ற குறும் படத்தில்  பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு  பற்றிய முறையான தகவல் வரும்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்க்கு ஒத்த, எஸ் ஜே சூர்யாவின் பெயர் இடப்படாத  ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ , இசை கலைஞனுக்கும் அப்படியே.  காற்றின் தேசம் எங்கும் செல்லும்  காணமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன் உவகையோடு.
Share.

Comments are closed.