திட்டமிட்ட தயாரிப்புக்கு பாஃடா மீடியா…

0

 198 total views,  1 views today

பாஃடா மீடியா தயாரிக்க ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் காற்றின் மொழி படத்தின் படப்படிப்பு தொடர்ந்து அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஜோதிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு,எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
மதன் கார்க்கியின் பாடல்களுக்கு ஏ.எச்.காஷிஃப் இசையமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு இயக்குநராகப் பொறுப்பேற்க, கலைப் பணியை கவனிக்கிறார் கதிர்.
கே.எல்.ப்ரவீன் படத்தொகுப்பு செய்ய, பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார்.
படத்தயாரிப்பைத் திட்டமிட்டு முறையாகச் செய்யும் அந்தக் கால தயாரிப்பு நிறுவனங்களான ஏவி.எம். வாஹினியைப்போல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறது பாஃடா மீடியா பி.லிட் நிறுவனம்.

Share.

Comments are closed.