திருமணத்திற்குப் பிறகும் நாட்டியத்தைத் தொடருங்கள் – நடிகை சுலக் ஷனா

0

Loading

 
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை
டி .என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம்,நடிகை சுலக் ஷனா,நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம்,கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி
 திருமதிஹேமலதா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள்.
நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் ….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை .பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்…நோய்நொடிகள் வரவே வராது.கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்”  என்றார்.
நடிகை சுலக்ஷனா பேசுகையில்…. “சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன்.மதுமிதா மேடையில் ஆடும் போது தானாக எனது கால்கள் தாளம் போட்டு ஆடத்துவங்கியது
நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம்.அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.மதுமிதாவிற்கும்…மது மிதவைப் போல் நாட்டியம் ஆடும் பெண்களுக்கும் என் வேண்டுகோள்…தினமும் ஒரு மணி நேரம் நாட்டியப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.
திருமணத்திற்குப் பிறகு பலர் சில நிர்பந்தத்தினால் நாட்டியத்தை விட்டுவிடுகிறார்கள்.தயவு செய்து  திருமணம் ஆன பிறகும் நாட்டியத்தைக் கைவிட்டு விடாதீர்கள்.நம் பாரம்பரியக் கலையான பரதக் கலைக்கு சேவை செய்துகொண்டே இருங்கள்”என்றார்.

 

Share.

Comments are closed.