டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில், ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில், தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மாசூம் சங்கர், அதுல்யா, எம்.ஜி.ஆர் லதா, மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ், இசையமைப்பாளர் ”ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில், ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். ”நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது.
நடிகர்கள்: ஆரி, ஆஷ்னாசவேரி, எம்.ஜி.ஆர். லதா, காளிவெங்கட், மாசூம் சங்கர், சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில்முரளி, மனோபாலா, சித்ராலக்ஷ்மண்.
டெக்னீசியன்ஸ் :
இயக்கம்-இசாக்,
ஒளிப்பதிவு-நௌஷத்,
இசை-ஸ்ரீ,
படத்தொகுப்பு – தேவராஜ்,
கலை – ராமலிங்கம், பாடல்கள் – தாமரை, உமாதேவி, முருகன்மந்திரம், வேல்முருகன், ஜெகன்சேட், சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்,
நடனம் – ராபர்ட், பாம்பே பாஸ்கர்,
ஆடைகள் – முகமது சுபீர்,
ஆடை வடிவமைப்பு – சோபியா சௌரிராஜன், தினேஷ்FT,
VFX – ட்ராட்ஸ்கி மருது
பிஆர்ஓ – வின்சன்.