திரையுலக நட்சத்திரங்களின் பாராட்டுகளை பெற்ற பலூன் போஸ்டர்கள்

0

 1,440 total views,  1 views today

ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் பலூன்.  ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து  தயாரித்து இருக்கும்   இந்த  ‘பலூன்’ படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசை யமைத்து இருக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வரும் இந்த பலூன் படத்தின் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தியும், இரண்டாம் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவியும், மூன்றாம் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனியும், நான்காம் போஸ்டரை விஷ்ணு விஷாலும் மற்றும் பலூன் படத்தின் டீசர் முன்னோட்டத்தை நடிகர் சூர்யாவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
“சகோதரர் ஜெய்! உங்கள் பலூன் படத்தின் முதல் காட்சி போஸ்டர் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. திலீப் சுப்பராயனை ஒரு தயாரிப்பாளராக பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஜனனி ஐயர் உட்பட ஒட்டுமொத்த பலூன் படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் ஆர்யா.
“பலூன் படத்தின் முதல் போஸ்டர் மிக அற்புதமாக உள்ளது. திலீப் மாஸ்டர், யுவன்ஷங்கர் ராஜா, ஜெய் மற்றும் பலூன் குழுவினருக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார் நடிகர் அதர்வா.
“அனைவரையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கின்றது பலூன் படத்தின் போஸ்டர். திலீப் மாஸ்டர், இயக்குநர் சினிஷ், ஜெய் சார் மற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த  சுவராசியமான படத்தை  ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்” என்று தன்னுடைய வாழ்த்துக்களை உற்சாகமாக பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன்
பலூன் படத்தின் டீசர் முன்னோட்டத்தை பார்த்த இயக்குநர் அறிவழகன் கூறியதாவது: “யுவன்ஷங்கர் ராஜாவின் மிரட்டலான பிண்ணனி இசையில் இந்த டீசர் முன்னோட்டத்தை பார்க்கும் பொழுது, உண்மையாகவே மிரட்டலாக இருக்கின்றது. இயக்குநர் சினிஷ், திலீப் மாஸ்டர் மற்றும் பலூன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்”
 
Share.

Comments are closed.