தோனி ரசிகராக  விக்ரம் பிரபு  நடிக்கும்  “ பக்கா “

0

 499 total views,  1 views today

 

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு           –  எஸ்.சரவணன்

இசை   –  C.சத்யா   

பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன்  

கலை   –  கதிர்

நடனம்   –   கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட்   –  மிராக்கிள் மைகேல்

எடிட்டிங்    –  சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் –  செந்தில்குமார்

இணை தயாரிப்பு  –  B.சரவணன்

தயாரிப்பு  –  T.சிவகுமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா

படம் பற்றி விக்ரம்பிரபு  கூறியதாவது…

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும்  டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் .

கிரிக்கெட் ரசிகரான நான்  டோனி பெயரில் ரசிகர் மன்றம்  நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.

ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி) 

கிராமத்து பெரிய மனிதர் மகள் நதியா(பிந்து மாதவி)

இப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கலகலப்பான பக்கா படம். நம்மால் மறக்கப் பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்..

இது வரை நான்  ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரினாமத்தை வெளிக் கொண்டு வரும் படமாக அமையும்.

கமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும் என்றார் விக்ரம்பிரபு.

படப்பிடிப்பு முழுவதும் சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது.

படம் பற்றி தயாரிப்பாளர் T.சிவகுமார் பேசும் போது …

நாங்கள் தயாரித்த அதிபர் படம் நல்ல படம் என்ற பெயரை பெற்றுத் தந்தது.

பக்கா படம் நல்ல கமர்ஷியல் வெற்றிப் படமாக வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நான் ஒரு நல்ல வேடத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்த படத்தை தொடந்து “ தர்மன் “ என்ற படத்தை தயாரிக்க உள்ளோம்.

நடிகர் நடிகை மற்றும் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கிறோம் என்றார்  T.சிவகுமார்

Share.

Comments are closed.

CLOSE
CLOSE