சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் இன்று (25-05-2018, வெள்ளிக்கிழமை) காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள K.S.மஹாலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.12க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.