நம்பிக்கையுடன் காத்திருக்கும் நடிகை சுபிக்ஷா

0

 188 total views,  1 views today

சிறிய வேடத்தில் நடித்தாலும், அதிலும் தன் திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதிக்கும் வண்ணம் நடிப்பவர்கள் வெகு சிலரே. இந்த வரிசையில் கண்டிப்பாக சுபிக்ஷாவுக்கு இடமுண்டு. விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த கடுகு படத்தின் மூலம் நம் கவனம் ஈர்த்த நடிகை சுபிக்ஷா, விரைவில் திரைக்கு வரவிருக்கும் கடுகு 2 படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகை சுபிக்ஷாவை சந்தித்தபோது கூறினார்…
”கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எனக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது. காரணம், கடுகு படத்தில் நான் நடித்து சிறய வேடம் என்றாலும், அது எனக்கு மிகவும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. கடுகு படத்துக்குப் பிறகு ரசிகர்கள் பலரும் என்னை கடுகு சுபிக்ஷா என்றே அடைமொழியிட்டு அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
படத்தில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் நடிக்கச் சொல்லிக் கொடுத்து வேலை வாங்குவது ஒரு பாணி என்றால், காட்சியமைப்பை விவரித்துவிட்டு நட்சத்திரங்களை அவரவர்கள் இயல்பிலேயே நடிக்க வைத்து மிகையில்லா நடிப்பை வரவழைப்பது மற்றொரு பாணி. இந்த இரண்டாவது பாணிக்கு சொந்தக்காரர்தான் இயக்குநர் விஜய்மில்டன்.
கோலி சோடா 2 படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டால் அதற்கு முழ முதற்காரணம் இயக்குநர் விஜய் மில்டன்தான். கோலி சோடா 2 கண்டிப்பாக என் திரையலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
கோலி சோடா 2 உலகம் முழுவதும் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகிறது. சமுத்திரகனி, க்ருஷா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா, பாரத் சீனி, எசக்கி பரத், வினோத், ரேகா, ரோஹிணி, ஸ்டன் சிவா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பாரத் சீனி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் மில்டன். எற்கனவே வெளியான ப்ரோமோ காட்சிகளில் சுப்ரீம் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. அச்சு இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார், குறிப்பாக பொண்டாட்டி பாடல் கோலி சோடா படத்தின் சுவையை கொண்டு வந்திருக்கிறது.​

Share.

Comments are closed.