ட்ரான்ஸ் இண்டியா மீடியா நிறுவனத்தின் திரு. ராஜேந்திர எம்.ராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ் திரையரங்கம்”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட “அகடம்” திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது. “நெடுஞ்சாலை” “மாயா” படப் புகழ் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” “இனிமே இப்படித்தான்” படங்களில் நடித்த ஆஸ்னா சவேரி ஜோடியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிறிய இடைவேளைக்குப் பின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள்.
நெளஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16 அன்று வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு 19 வெட்டுகளை கொடுத்து U/Aசான்றிதழ்வழங்கிஉள்ளது.
நடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சவேரி, எம்.ஜி;ஆர் லதா, காளிவெங்கட், மாசூம் சங்கர், சித்தாரா, அபிலாஷ், அதுல்யா ரவி, அனில் முரளி, மனோபாலா, சித்ரா லக்ஷ்மண்.
டெக்னீசியன்ஸ் : இயக்கம் – இசாக், ஒளிப்பதிவு – நெளஷத், இசை – ஸ்ரீ, படத்தொகுப்பு – தேவராஜ், கலை – இராமலிங்கம், பாடல்கள் – தாமரை, உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், ஜெகன் சேட், சண்டைப்பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – ராபர்ட், பாம்பே பாஸ்கர், ஆடைகள் – முகமது சுபீர், ஆடை வடிவமைப்பு – சோபியா செளரிராஜன், தினேஷ் FT, VFX – ட்ராஸ்கிமருது, PRO – வின்சன் C.M