301 total views, 1 views today
பாடகராக, இசைமைப்பாளராக, நடிகராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஜீ.வி.பிரகாஷ் குமார். அவரதுமெய்சிலிர்க்கும் குரலில் பாடிய பல பாடல்கள் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய்நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் பாடிய “மெர்சல் அரசன்” பாடல் ரசிகர்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.
தற்போது அவரே மெய்சிலிர்த்துப் போன ஒரு பாடலை இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் “நாச்சியார்” படித்திற்காக பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசையில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் “ஒன்னவிட்டா யாரும் இல்ல எங்கையில் உங்கையச் சேத்து கைரேகை மாத்துது காத்து” என்று தொடங்கும் பாடலைத்தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பாடகி பிரயங்காவுடன்இணைந்து பாடியுள்ளார். மேலும் இப்பாடல் அனைவரது மனதை வருடும் என்றும், அனைவரின் மனதிலும் நீங்காஇடம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜோதிகா ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கும் “நாச்சியார்” படத்தை பி ஸ்டுடியோஸ், EON ஸ்டுடியோஸ்தயாரித்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு – ஈஸ்வர், படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை – C.S.பாலசந்தர்.
பாடகி பிரியங்காவின் கனவை நிறைவேற்றிய இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு தீராத ஆசை இருக்கும், அது இசைஞானிஇளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே.
தனது இனிமையான குரலால் அனைவரையும் வசிகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்க்கும் இந்தக் கனவு பல நாட்களாகஇருந்துவந்தது.
தற்போது இவரது பல நாள் கனவு நினைவாகியுள்ளது, இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலாஇயக்கத்தில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் உருவான “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில்நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார்.
பிரயங்காவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் மிகுந்த சந்தோஷத்தோடு உள்ளார்.