நாயை வைத்து உருவாகும் அட்வென்சர் படம்.!

0

Loading

இந்திய திரையுலகில் இதுவரை பல விதமான படங்கள் வெளியாகி விட்டன. படங்களில் விலங்குகளை வைத்தும் தமிழில் சில படங்கள் வெளியாகி இருந்தன. ஆனால் விலங்குகளை மையப்படுத்தி ஹாலிவுட்டில் மட்டுமே படங்கள் உருவாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது அப்படியாக ஒரு படம் தமிழ் சினிமாவில் உருவாக உள்ளது. ஒரு நாயை தனித்துவமாக வைத்து ஒரு படம் உருவாக உள்ளது. இந்த படத்தை உறுமீன் பட இயக்குனரான சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தை காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிப்பும் படத்தின் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் புதிய மைல் கல்லை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவி கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாகவும் குழந்தைகள் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
Share.

Comments are closed.