இன்று அதாவது 13.6.18 அன்று விஷால் தரப்பிலிருந்து ஒரு செய்தி அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த செய்தியை அ்ப்படியே கீழே தருகிறோம்.
எப்படி இருக்கிறது பார்த்தீர்களா காமெடி…
மயிலாடுதுறையில் உள்ள கோமதி திரையரங்கல் ஒரு குப்பைக் கதை என்ற புதிய படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த நபரைப் பிடித்து காவல் துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். உடனடியாக காவல் துறையும் அந்த நபரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து திரையரங்குக்கு சீல் வைத்து விட்டார்கள். இந்த நடவடிக்கையில் சென்னையில் உள்ள விஷாலின் பங்கு என்ன இதுதான் விஷாலின் இயல்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளம் தின்பது ஒருத்தன் விரல் சூப்புவது ஒருத்தன் என்பதுபோல், யாரோ செய்த ஒரு நல்ல காரியத்துக்குகூட மாலை அந்த நபர் கழுத்துக்குச் சென்று விடாமல் தடுத்து, தன் கழுத்தை நீட்டி அந்த மாலையை பெற்றுக் கொள்ளும் விஷாலின் சின்ன புத்தியை என்னவென்று சொல்வது.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை வில்லிவாக்கம் பகுதி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பிரபல திரையரங்கில் திருட்டு வி.சி.டி. பதிவு நடந்தபோது ஆபரேட்டர் மேலாளரை கைது செய்து திரையரங்கு சீல் வைக்கப்பட்டது நினைவிருக்கிறதா அந்தத் திரையரங்கு இப்போது செயல் பட்டுக்கொண்டிருக்கிறதே. ஏன் இது போன்ற திரையரங்குகள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
தமிழ் நாட்டில் இருக்கும் அளவுக்கு திருட்டு டிவிடி பிரச்னை அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இல்லாததன் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதன்படியே தமிழகத்திலும் செய்ய முடியாதா திருட்டு டிவிடியை ஒழிக்கப் புற்பட்ட இந்த வெண்ணை வெட்டி சிப்பாய் விஷாலால்
தான் சார்ந்திருக்கும் தொழிலுக்கு உண்மையில் சேவை செய்ய வேண்டும் என்று தலைமைப் பொறுப்புக்கு வருபவர், தன் சுயலாபத்தை மறந்து விட்டு, ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டுமே தவிர விஷாலைப்போல் செய்து கொண்டிருக்கக்கூடாது.தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போது தமிழ் ராக்கர்ஸை பிடிப்பதுதான் தன் முதல் லட்சியம் என்று சொல்லி ஓட்டு வேட்டை நடத்தியவர் விஷால். அப்போது இவருக்குத் தளபதியாக நின்ற தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு திரைப்பட விழாவில் தமிழ் ராக்கர்ஸை தே… ..யா என்று மைக்கிலேயே திட்டி விழாவுக்கு வந்தவர்களை முகம் சுழிக்க வைத்தார். வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் கணிப்பொறி வல்லுனர்களைக் பணிக்கமர்த்தி தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்க சுமார் நாற்பது லட்சம் ரூபாய்வரை செலவு செய்தார் விஷால். அவர்களும் ஒரு வழியாக தமிழ் ராக்கர்ஸை அடி முதல் நூனி வரை ஆய்வுசெய்து கண்டுபிடித்து முழு ஜாதகத்தையைும் ஒரு கோப்பி்ல் போட்டு விஷாலிடம் கொடுத்தார்களாம்.
பல நாட்களாக கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்த கோப்பின் நிலை என்ன தெரியாமலே நாள்கள் கடந்த செல்ல, திடீரென இதற்கு விடை கிடைத்தது. விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் இரும்புத்திரை படத்துக்கு லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் நிதியுதவி செய்வதுடன், முழு விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறது என்பதுதான் அந்த விடை. லைக்கா புரொடக்ஷன்ஸ்தான் தமிழ் ராக்கர்ஸை பின்னணியில் இருந்து நடத்துவதாக சில பல ஆதாரங்கள் அடங்கிய முழு விவரங்களையும் இணைய தள ப்ளாக் ஒன்று வெளியிட்டருப்பதைக் கண்ட தமிழ்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. நல்ல வசூலைப் பெற்று ஓடிக்கொண்டிருந்த சில பெரிய பட்ஜெட் படங்களின் 5.1 தரத்திலான டிவிடிக்கள் கள்ளத்தனமா விற்பனை செய்யபட்டிருப்பதும், அந்தப் படங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஓரு காம்ப்ளெக்ஸ் திரையரங்கில் படமாக்கப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சென்னை பெங்களூரு என்று இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளைக் கொண்ட பி.வி.ஆர். சினிமாஸ்தான் இந்த குற்றத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது என்றும் இதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படும் என்று அறிவித்தார். நாட்கள் நகர்நது மாதங்களாக உருண்டோடியதுதான் மிச்சம். விஷாலு்க்கு பகிரங்க சவால் விட்டுக் கேட்கிறோம். பி.வி.ஆர். சினிமாஸ் மீது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என்று விளக்கிக்கூற முடியமா
தொடரும்