‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

0

Loading

எந்த ஒரு படத்திற்கும் தகுந்த  சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு  பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிமிர்’ படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். ‘நிமிர்’ படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில், மோகன் தாஸின் கலை இயக்கத்தில் ‘நிமிர்’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் M S பாஸ்கர், சமுத்திரக்கனி மற்றும் ஷண்முகராஜ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Share.

Comments are closed.