நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் “டிக் டிக் டிக்”

0

Loading

ரசனைமிகுந்த வெற்றிப் படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10வது தயாரிப்பான “டிக் டிக் டிக்” படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது.
தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். மிருதன் வெற்றி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது.
டிக் டிக் டிக் படத்திற்காக பிரம்மாண்டாக மிகுந்த பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 38 நாட்கள் ஒரே ஷெடுயுலாக நடைபெறவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பான “டோரா” படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நாயகியாக நடிக்கும் டோரா படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.
Share.

Comments are closed.