நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ள ‘அறம்’

0

 420 total views,  1 views today

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அறம்’. ‘விக்ரம் வேதா’ போன்ற  தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து , தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை ஈன்றெடுத்த ‘Trident Arts’ நிறுவனம் ‘அறம்’ படத்தை நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது.
இது குறித்து ‘Trident Arts’ ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், ” இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். ‘அறம்’ படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை” என்று கூறினார். ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கான  எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.
Share.

Comments are closed.