படப்பிடிப்பு முடியும் தருவாயில் ‘ஒரு நல்ல  நாள் பாத்து  சொல்றேன்’

0

 459 total views,  1 views today

ஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும்  படங்களே வணிக பலம் பெறும் படங்களாக  இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஒரு நல்ல  நாள் பாத்து  சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். ‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் செய்யவுள்ளது. நவம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுதிலிருந்தே இப்படத்தை வணிகத்தார்கள் போட்டி போட்டு வாங்க தொடங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இதற்க்கு விஜய் சேதுபதியின் அசுர வளர்ச்சியும் கவுதம் கார்த்திக்கின் வெற்றி பயணம் தொடங்கியுள்ளதும்  தான் காரணம்  என கூறப்படுகிறது. ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டிங் செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

Share.

Comments are closed.