274 total views, 1 views today
சென்னை பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் நடந்து வரும் ‘வெற்றியாளர் பட்டறை’ வகுப்புகள், நமது நாட்டின் அடுத்த தலைமுறையை ‘ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும்’ வளர்க்கும் முயற்சி. இதில் கடந்த சில வருடங்களாக நடக்கும் ‘ஒவிய வகுப்பின்’ மாணவர் படைப்புகளை ஞாயிறன்று ‘11/2/2018’ காலை 10 மணிக்கு காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியையும், கிராம மாணவர்களுக்காக நடைபெறும் ஒவிய போட்டியையும் அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் திரு.முகுந்தன், தன் இதர நேரங்களில் தன் கிராமத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னலமற்ற பணியாற்றி வருகிறார். இந்த பட்டறையிலிருந்து பல்வேறு கலைகளை கற்று மாணவர்கள் வெகுவாக பயனடைகிறார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.