‘பயிர் வளர்க்கும் பாடல்

0

 298 total views,  1 views today

இசையமைப்பாளர் குரு கல்யாண் சமீபத்தில் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது.

சோல் சாங்/ Soul Song” – பொருள்: “உயிர் பாட்டு”. ஆம் இதுவே என்னுடைய புதிய ‘இசை செயலி – Music App”. (ஆண்டிராய்டு தளத்திற்கானது)

“சோல் சாங்” – என்னும் எனது இந்த இசை செயலி இறையருளால் இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலியின் மூலம் அன்பு உள்ளங்கள் என்னுடன் பிரத்யேக தொடர்பில் இருக்கலாம். மேலும், இந்த செயலியில் என்னுடைய பாடல்கள், நேர்கானல்கள், செய்திகள், முகநூல் பக்கங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

சோல் சாங் ஆப் பதிவிறக்கம் செய்ய: https://snappy.appypie.com/ind ex/app-download/appId/cc200db1 3f6b

முதல் வெளியீடாக இந்த செயலியில், பயிர் வளர்க்கும் பாடல் – இசையால் உரம் எனும் தனிப்பாடலை வெளியிட்டுள்ளேன்.

உலகெங்கும் உள்ள விவசாயிகளின் பயிர், தாவரங்கள் நன்கு வளர்ந்து மிகுந்த மகசூலை ஈட்ட உதவ வேண்டும் என்று இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆராய்ந்த இசை நுணுக்கங்களையும், வார்த்தைகளையும் கொண்ட இப்பாடலை தங்களது பயிர்களுக்கும், தாவரங்களுக்கும், கொடி மற்றும் மரங்களுக்கும், வயலிலோ வேறு எங்கு தேவையோ அங்கு தினசரி ஒரு முறையோ பல முறையோ ஒலிக்க செய்யுங்கள். பெரிய மகசூலை ஈட்ட இப்பாடல் உதவும்.

 – விவசாயிகளுக்கு இப்பாடல் சமர்ப்பணம்   

இப்பாடலை இந்த செயலியில் உள்ள லேட்டஸ்ட்/Latest என்ற பிரிவில் இசைக்கணொளியாக வெளியிட்டுள்ளேன். இப்பாடலை பதிவிறக்கம் செய்ய செயலியில் என்னை தொடர்பு கொள்ளவும்.  

இவ்வாறு அந்த அறிக்கையில் குரு கல்யாண் தெரிவித்திருக்கிறார்.

Share.

Comments are closed.