பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டு ….!

0

 131 total views,  1 views today

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது…
திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் , விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் இரஞ்சித் திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு…
“ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது… ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE