பழைய டெல்டாவைப் பார்க்கணுமா… சீமைத்துரையைப் பாருங்கள்!

0

 203 total views,  1 views today


கஜா புயல் அலங்கோலமாக்கப் போட்ட டெல்டா பகுதியில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தவரும் இந்த வேளையில் புயலுக்கு முன்பிருந்த டெல்டா பகுதிகளைக் காணவேண்டுமா இம்மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் சீமைத்துரை படத்தை திரையரங்குக்குச் சென்று பார்க்லாம்.
படத்தின் இயக்குநர் சந்தோஷ் நாராயணனை் சமிீபத்தில் சந்தித்தபோது கூறினார்…
காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம். கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம். சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம். ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது. நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார் சந்தோஷ் நாராயணனை்.

கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர், கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரம் அவருக்கு. ’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,

தயாரிப்பு
புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா

இணை தயாரிப்பு
ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
சந்தோஷ் தியாகராஜன்

Share.

Comments are closed.