பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்!!

0

 135 total views,  1 views today

 

மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் “எழுமின்” திரைப்படத்திற்காக சிறப்பாக உருவான “எழு எழு” என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, “இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்” என்று நடிகர் விவேக்கிடம் கூறியுள்ளார் இயக்குநர் வி.பி.விஜி. அதனை ஏற்று சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும்படி நடிகர் விவேக்கும் பாடல் வரிகளை மிகவும் சிரத்தையுடன் எழுதியுள்ளார். பாடல் வரிகளை எழுதி முடித்தவுடன் இப்பாடலுக்கு அனிருத்தின் குரல் மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது நடிகர் விவேக்கின் எண்ணமாக இருந்திருக்கிறது.

அதன்படி, இப்பாடலுக்காக அனிருத்தை இயக்குநர் வி.பி.விஜி தொடர்பு கொண்ட பொழுது, “எழுமின்” கதையை பற்றியும் பாடல் வரிகளை பற்றியும் விரிவாக கேட்டறிந்திருக்கிறார். அவருக்காக “எழுமின்” டிரெய்லரும் போட்டு காண்பிக்கப்பட்டிருக்கிறது.

அதனைப் பார்த்த அனிருத் “இது வழக்கமான சினிமா அல்ல, சிறுவர்களையும் இளைஞர்களையும் ஊக்குவிக்கும் இப்பாடலை நானே பாடுகிறேன்” என்று உடனே பாட சம்மதமும் தெரிவித்திருக்கிறார். அனிருத்தின் உற்சாகமான குரலில் அவரது ஸ்டூடியோவிலேயே எழு எழு பாடல் பதிவு நடைபெற்றது. இதுவரை எத்தனை பெரிய சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் “எழு எழு” பாடல் பதிவின் போது “நல்லா வந்திருக்கா, இது நல்லாயிருக்கா” என்று கேட்டு கேட்டு பாடிக்கொடுத்த அனிருத்தின் ஆர்வத்தை கண்டு இயக்குநர் வி.பி.விஜியும், நடிகர் விவேக்கும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

Share.

Comments are closed.