466 total views, 2 views today
மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ” ஆகாச வாணி சென்னை நிலையம் ”
இந்த படம் தெலுங்கு, தமிழ் கன்னடா, மலையாளம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான சதீஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
சிவக்குமார், உம்மைசந்தர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
அக்ஷதா ஸ்ரீதர், அர்ச்சனா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் மாதவி லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – ஆரிப்
இசை – கார்த்திக் கொடக்கண்ட்லா
இணை தயாரிப்பு – கிரந்தி பிரசாத்
தயாரிப்பு – M.M.அர்ஜுன்
எழுத்து, இயக்கம் – சதீஷ் பத்துலா .
படம் பற்றி இயக்குனர் சதீஷ் பத்துலா தெரிவித்தது…..
ஆகாசவாணி சென்னை நிலையம் ஒரு எண்டர்டெயின்மென்ட் மற்றும் திரில்லிங் கலந்த வித்தியாசமான லவ் ஸ்டோரி. சிறப்பான நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு கிடைத்ததால் தான் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க முடிந்தது.
இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த இந்த வரவேற்பை பெரும் படம் விரைவில் 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது என்றார்.
தயாரிப்பாளர் எம்.எம்.அர்ஜுன் கூறியதாவது…
அடுத்து இயக்குனர் சதீஷ் இந்த கதையை என்னிடம் சொன்ன உடனே எனக்கு பிடித்து விட்டது அவர் கதை சொன்னதை விட படத்தை சிறப்பாக இயக்கி முடித்திருக்கிறார்.
இது ஒரு யுனிவர்சல் பாயிண்ட் என்பதால் தெலுங்கு ,தமிழ், கன்னடம், மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகிறோம் கார்த்திக் கொடகண்ட்லா இந்த படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருக்கிறார் விரைவில் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிக்க இருக்கிறோம்.