பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு – பார்த்திபன் தந்த அதிர்ச்சி!

0

Loading

bharathi - parthiban

அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விதார்த், இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் மனோபாலா, நடிகர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா , “ இந்த படத்தின் நாயகன் விதார்த், மிக வீரியமான நடிகன். பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் அவன் பெரிய இடத்தை பிடித்து, தேசிய விருது வாங்குவான்” என்றார்.

மேலும், “பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், ஆழமான சிந்தனை உடையவன். ரொம்ப திறமைசாலி. நிச்சயம் அவன் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவான். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், “ இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்கவேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன். பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த ‘குரங்கு’. குரங்கு நான்கு எழுத்து.

கு / நல்ல குணவான்
ர / சிறந்த ரசனையாளர்
ங் / இங்கிதம் தெரிந்தவர்
கு / குவாலிட்டியானவர்

இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம் என்றார்.

Share.

Comments are closed.