பார்வையற்ற மாணவர்களின் ‘பறக்கும்’ ஆசை! நிறைவேற்றிய நடிகர் ‘மைம்’ கோபி!

0

 785 total views,  1 views today

IMG_2263
பார்வையற்ற மாணவர்கள் 21 பேரை சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களின் விமான பயண பறக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் மைம் கோபி.
மதுரை ரவுண்ட் டேபிள் 99 கிளப் மற்றும் ஜீ மைம் ஸ்டுடியோ இணைந்து இதை ஏற்பாடு செய்துள்ளது. மதுரை ரவுண்ட் டேபிள் பேட்ரிக் இதற்காக மைம் கோபியுடன் இணைந்து இதை செய்துள்ளார். 
ஒருநாள் முழுவதும் மதுரையில் ரிசார்ட் ஒன்றில் அவர்களை தங்க வைத்து நல்ல உணவு விளையாட்டு என மகிழ்ச்சியாக வைத்திருந்து திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மைம் கோபி கூறுகையில், “போன வருடம் ஆதரவற்ற குழந்தைகளை கோயம்புத்தூருக்கு அழைத்து சென்றோம், இந்த வருடம் பார்வையற்ற மாணவர்களை அழைத்துசெல்கிறோம்..மகிழ்ச்சி மட்டுமே. வேறொன்றுமில்லை. நான் இவர்களை மகிழ்விப்பதை பார்த்து இன்னும் பலர் இதுபோல செய்ய வருவார்கள் என்பதற்காகவே உங்களிடம் இதை தெரிவிக்கிறேன்” என்றார். 
சென்னை விமான நிலையத்தில் பார்வையற்ற மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்ப நடிகர் ராமகிருஷ்ணன் மற்றும் இசையமைப்பாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share.

Comments are closed.