நேற்று விஜய் டிவியில் சிவகுமாரின் “ நெல்லையில் சிவகுமார் “ என்ற தலைப்பிலான நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பிரபலங்கள் பலர் சிவகுமார் அவர்களிடம் அந்நிகழ்ச்சி தங்களுக்கு எந்த மாதிரியான ஒரு அனுபவத்தை தந்தது என பகிர்ந்தகொண்டனர். அதில் சிலவற்றை இதில் இணைத்துள்ளோம் ,
வணக்கம் சார்…நேருக்கு நேர் குடும்பத்தினருடன் பார்த்தோம்…பயனுள்ள ,கடைபிடிக்க வேண்டிய பல தகவல்கள்….பதின் பருவ வயதில் தானாக தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும் என்று சொல்லி உறவினர்கள் எப்படி ஆறுதலாக இருக்கவேண்டும் என கூறியது அருமை….நன்றி. ஶ்ரீராம்
தந்தி டிவி
“விவசாயியின் அவல நிலைக்கு காரணம் என்ன?” இன்று காலையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான “நெல்லையில் சிவகுமார்” என்ற தலைப்பிலான நேருக்கு நேர் நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட இந்த கேள்விக்கு திரு சிவகுமார் அளித்த பதில்: “இந்தியாவில் அனைத்து உற்பத்திப்பொருட்களும் சந்தையில் விற்கப்படும் முன்னர் அவற்றின் விலைகளை விற்பனையாளர்கள் நிர்ணயித்துவிடுகிறார்கள். வாங்குபவர்களுக்கு அதில் சாய்ஸ் எதுவும் இல்லை. ஆனால் ஒரு விவசாயி உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கான விலைகளை வாங்குபவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். இந்நிலை மாறாத வரை விவசாயிகளின் அவல நிலை நீடிக்கத்தான் செய்யும்”
ஜெயராமன் – Engineer
உங்கள் நிகழ்ச்சியை
பார்த்தோம்…
யானைப் பசிக்கு
சோளப் பொரி…
மிகவும் அருமை
விளம்பரம் நீங்கலாக
3/4 மணி நேரம்
பத்தாது…
நாள் முழுமையும்
பத்தாது…அய்யா…
-ரசிகன்
Enchanting , no words ,stage management , details exemplary superb sir .!!!
Dr. Neelaveni – professor
..ilaignargalai Vazhi nadaththa Vaeru Yaar inggullaargall. .iyalbaga paesi. ..
Kavingar Alagunila
அன்பு அண்ணா,
தங்கள் நெல்லை உரை பார்த்தோம்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உங்கள் உரை ஓர் நல்ல எடுத்துக்காட்டு.
மாணவர்க்கு தேவையான அற்புத
உரையாடல்….
வாழ்க உங்கள் தொண்டு, வளர்க மாணவர் எழுச்சி…
– A.P.Nagarajan fly
Brilliant answers by Sivakumar . Need to meet him once with your guidance . Amazing personality and what a memory ! Thank him on my behalf .
Only problem is my eyes get welled as I hear him . Aging or emotions or simply me ?? Whenever free we will chat on this too .
– prof. Anuradha
அண்ணா, குடும்பத்தோடு பார்த்தோம் ரசித்தோம். பயனுள்ள பலப்பல கருத்துக்களை அருவியாய் அள்ளித் தெளித்துவிட்டீர்கள். முழுமையான பதிவை பார்க்க விருப்பம்.
கல்யாணகுமார்
Journalist
Especially the answer for how to take care the child in 1 to 5 ,teenage and marriage superb sir ????????????????????????????????????
Kamakchi- SÏshya- teacher
Very nice programme sir. For spontaneous questions you replied spontaneously with genuine reasons and historical stories. Since i am busy in arranging things for arangetram of soorya i want to listen peacefully again. I hope i can view it again in hotstar link. This programme is another feather in your cap sir. You are the greatest inspiration to present generations
– Neelakandan
AIR
அண்ணா..
கண்களில் கண்ணீர் மிதக்க தங்கள் அனுபவ பதில்களை, குடும்பத்துடன் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.
Mrs.Y.G.பார்த்தசாரதி வாழ்த்தியது போல, நீங்கள்
120 வயதிலும் ராமாயணம்-மகாபாரதம் பேசுவீர்கள்…
அப்போதும் அவை உங்கள் குரலில் புத்தம் புதியதாக ஒலிக்கும்.
நான் ஒரு ஓரமாக நின்று கேட்டுக்கொண்டு இருப்பேன்.
-PONCEE- Vikatan
மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
நெல்லை மாவட்டத்திலேயே இப்படி ஒரு கூட்டம் நடந்திருக்குமா என்கிற அளவிற்கு மிக உன்னதமான கூட்டம்.வற்றாத தாமிரபரணி பிரவாகம் எடுத்து பொங்கி பாய்ந்தது போல தங்கு தடையற்ற உரை.இளைய சமுதாயம் விழிப்போடு உயர் வதற்கு, பின்பற்றுவதற்கு கைக்கொள்ள வேண்டிய மாபெரும் சிந்தனை முத்துக்கள்.
லோகநாதன்,திருப்பூர்.
நேர்காணல் நிகழ்ச்சி சிறப்பாஇருந்தது. பரந்துபட்ட அனுபவம் வாசிப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அமைந்தது. சுகம் தலையாகவும் துக்கம் வாலாகவும் தொடரும் வாழ்வு இறைவனின் லீலை எனறது சிறப்பு. மொத்தத்தில் மனித வாழ்விற்கு தேவையான மன நிறைவு தரும் நேர் காணல். ♡ நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
Prof.Sundaresan- Pacchaiappa college
சிவகுமார் uncle
தகவல் தங்கம்
மனப்பாட சிங்கம்
அவர் பேச்சில்
அறிவுரை முக்கிய அங்கம்
I ll take him as my ரோல் மாடல்
He is not a mere ரீல் மாடல்
– T.S.Siva Shankar,
S/o Dr. Sankara Saravanan alias
Thirukural Saravanan
IX std,
My wife appreciated that your speech is so nice.
She observed that many segments of your speech are mainly based on Surya Sir’s life ..eventhough you didn’t mention it directly. ..
Particularly adolescent Psychology, Respect for love ……
She said you have spoken. .what you experienced and practiced. ..That’s why your speech is very unique and you excelled as an Orator. ..????????????????????????????
‘Thirukkural ‘Saravanan
Sir. Vanakkam . How ru. Well… got to see ur nellai speech on vijay tv. . No frills to speak of. Ennakku vaarthaygale illai ungalai pugazha. Wow. U r A walking encylopaedia shivkumar ji. Sir. Hats off to u. U r making history. Neengal tamiznattin pokkisham. Adayalam. Pranams. With due respects to u and ur family.
Pepsi uma…
சார் வணக்கம். காலை நிகழ்ச்சி நிச்சயம் ஒரு புதிய கலரைத் தந்தது. அதிலும் ஆசிரியர்களுக்கு நீங்கள் தந்த அந்த அட்வைஸ் சூப்பர்.
எங்கே எடிட் பண்ணியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஷார்ப்பாகச் செய்திருக்கிறார்கள். நிறைவாக இருந்தது.
-அமுதவன். பெங்களூர்
வழக்கம் போலவே நேற்றைய நிகழ்ச்சியிலும் உங்கள் பதில்களில் சமூகத்தின் மீதும் அடுத்த தலைமுறையினர் மீதும் நீஙகள் கொண்டுள்ள மனப்பூர்வமான அக்கறை பளிச்சிட்டது. இளைய தலைமுறைக்கான நேர்மறை வழிகாட்டியாய் விளங்கிய திரு.அப்துல் கலாமின் இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை நீங்கள் நிரப்பி விட்டீர்கள் சார். அறிவார்ந்த மக்கள் எப்படி மற்றவர்களை ஊக்குவிக்கும் பணியைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டு்ம் என்பதற்கும் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறீர்கள். பெருமையுடன் வாழ்த்தி வணங்குகிறேன் சார்.
-பட்டுக்கோட்டை பிரபாகர்.
????????????????????????????�????