‘பியார் பிரேமா காதல் – காதல் -காமெடி படம்

0

 536 total views,  1 views today

“பிக் பாஸ்” ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த  ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக- நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு உள்ளனர். பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த இளம் ஜோடி ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் ஜோடியாக படத்தில்  நடிக்கவுள்ளனர்.  தற்போதைய திறமையான இளம் இயக்குனர்களில்  ஒருவராக கருதப்படும் இலன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘பியார் பிரேமா காதல் ‘ என சுவாரஸ்யமான தலைப்பு இடப்பட்டுள்ளது. இது ஒரு காதல் -காமெடி படம்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க இந்த  படத்தை  தயாரிப்பவர், திறமைகளை என்றுமே பாராட்டி ஆதரவளிக்கும் இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா.  பாகுபலி படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ‘K Productions’ நிறுவனத்தோடு இணைந்து தனது YSR Films Pvt Ltd நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
”ஒரு படத்தை தயாரிக்கும் பொழுது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி,  நல்ல கதை, நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள்,முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது. வெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் ‘K Productions’ ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். இலன் இயக்கும்  இந்த பெயரிடப்படாத படத்தை தொடர்ந்து மேலும் பல தரமான படங்களை நாங்கள் தயாரிக்கவுள்ளோம்.” என நம்பிக்கையோடு கூறினார் யுவன் ஷங்கர் ராஜா.
‘பியார் பிரேமா காதல் ‘படத்திற்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்யவுள்ளார் , மணி குமரன் சங்கரா படத்தொகுப்பில் , E. தியாகராஜன் கலை இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.
Share.

Comments are closed.