819 total views, 1 views today
கடந்த வாரம் சில வெளி நாட்டு மருத்துவ நிறுவனங்கள் மருத்துவரும் , நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தவறான மருந்தை பிரயோகிக்க மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதும், அதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் செய்ததும் அறிந்ததே. இதை தொடர்ந்து திவ்யா சத்யராஜ் இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வகையான அங்கீகரிக்க படாத , அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு கேட்டு கொண்டார். இதை தொடர்ந்து அவர் அதே கடிதத்தில் நீட் நுழைவு தேர்வினால் வரும் விளைவை பற்றியும், மருத்துவ உலகில் பெருகி வரும் அசிரத்தை பற்றியும் , நுழைவு தேர்வில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் எழுதி உள்ளார்.