242 total views, 1 views today
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
கலை – ஜாக்கி
எடிட்டிங் – ரமேஷ்
பாடலாசிரியர் – யுகபாரதி
சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்
நடனம் – திணேஷ், ஜான்
மக்கள் தொடர்பு – மெளனம் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.
தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்
எழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி உள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக்கூடிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும்.
இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.
படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைய உள்ளது.